உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதுப்பட்டினத்தில் நாளை உணவு பாதுகாப்பு முகாம்

புதுப்பட்டினத்தில் நாளை உணவு பாதுகாப்பு முகாம்

புதுப்பட்டினம்:அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரியம், புதுப்பட்டினம் பகுதிகள் ஒருங்கிணைந்ததாக உள்ளது. இப்பகுதியினருக்கு புதுப்பட்டினம் பிரதான வர்த்தக பகுதியாக உள்ளது.இங்கு சைவ, அசைவ உணவகங்கள், தேனீர், குளிர்பானம், ஜூஸ் கடைகள், இனிப்பகங்கள், பேக்கரிகள் உள்ளிட்டவை இயங்குகின்றன.மேலும், நடைபாதை சிற்றுண்டி உள்ளிட்ட உணவு வியாபாரம் செய்வோர், தின்பண்டங்கள் தயாரித்து கடைகளுக்கு வழங்குவோர், மெஸ் நடத்துவோர், இறைச்சி விற்போரும் உள்ளனர்.உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சான்றிதழ் பெறுவது அவசியம்.இதையடுத்து, ஏற்கனவே உரிமம் பெற்று புதுப்பிக்காதது, புதிதாக உரிமம் பெறுவது, உணவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, உணவு பாதுகாப்புத் துறையினர், புதுப்பட்டினத்தில் நாளை காலை 10:00 - பிற்பகல் 2:00 மணி வரை, விழிப்புணர்வு முகாம் நடத்துவதாக, புதுப்பட்டினம் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ