சமூக வலைதளங்களை தவிர்க்க முன்னாள் டி.ஜி.பி., அட்வைஸ்
மதுராந்தகம்:''தேர்வு ஒரு திருவிழா.- எனவே மாணவ, மாணவியர் சமூக வலைதளத்தில் மூழ்காமல், தேர்வுக்கு முழு மனதுடன் படிக்க வேண்டும்,'' என, முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பாக,'தேர்வு ஒரு திருவிழா' நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்று மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.விழாவில், அவர் பேசியதாவது:இன்னும், 100 நாட்களில் நடைபெறவுள்ள அரசு பொது தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர், சமூக வலைதளங்களில் மூழ்காமல், படிப்பில் அக்கறை செலுத்தி, அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்.அரசு நடந்தும் தேர்வுகளில், அதிகப்படியாக தமிழக மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.மத்திய அரசின் வேலை வாய்ப்பு தேர்வுகளில், அதிகப்படியாக வடமாநில மாணவர்களே கலந்து கொள்கின்றனர்.தமிழக மாணவர்களும், மத்திய அரசின் அனைத்து தேர்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.