உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டாஸ்மாக் ஊழியரை தாக்கிய நால்வருக்கு வலை

டாஸ்மாக் ஊழியரை தாக்கிய நால்வருக்கு வலை

மறைமலை நகர்:மறைமலை நகர் அருகில் டாஸ்மாக் ஊழியரை பாட்டிலால் தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் சந்தக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 48. இவர் மறைமலை நகர் அடுத்த கோவிந்தபுரம் டாஸ்மாக்கில், விற்பனையாளராக பணி புரிகிறார். நேற்று முன்தினம் இரவு 7:45 மணியளவில், ராஜேந்திரனிடம், 25 வயதுள்ள நான்குபேர், பீர் வாங்கினர். பின், டாஸ்மாக் அருகில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது கடைக்கு லோடு இறக்கும் லாரி வந்ததால், ராஜேந்திரன் அந்த நபர்களை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறினார். இதில் தகராறு ஏற்பட்டு, நால்வரும் சேர்ந்து ராஜேந்திரனை பீர் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். ராஜேந்திரனுக்கு முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, சிங்கபெருமாள் கோவிலில் உள்ள அரசு அவரச சிகிச்சை மையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு எட்டு தையல்கள் போடப்பட்டன. ராஜேந்திரன் அளித்த புகாரையடுத்து மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற நால்வரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ