உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காட்டாங்கொளத்துார் இரட்டை கொலை சிறுவன் உட்பட மேலும் 4 பேர் கைது

காட்டாங்கொளத்துார் இரட்டை கொலை சிறுவன் உட்பட மேலும் 4 பேர் கைது

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விமல், 21. இவரது நண்பரான, அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 21.இருவர் மீதும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவர்கள் இருவரையும் கடந்த 11ம் அதிகாலை, காந்திநகர் பிரதான சாலையில், மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.இச்சம்பவம் குறித்து, மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், முக்கிய குற்றவாளிகளான திருநங்கை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.தொடர் விசாரணையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நவீன், 19, நந்தகுமார், 23, யோகேஷ், 19, மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்டோரை, போலீசார் கைது செய்தனர். இவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூவரை சிறையிலும், 17 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி