மேலும் செய்திகள்
நாளை இலவச கண் சிகிச்சை முகாம்
14-Mar-2025
கல்பாக்கம்:கல்பாக்கம் சுற்றுப்புற பகுதியினருக்கு, சென்னை அணுமின் நிலையம் சார்பில் நாளை முதல், வரும் 29ம் தேதி வரை, இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.இந்திய அணுமின் கழகத்தின் கீழ், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. இந்நிர்வாகம், சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், சுற்றுப்புற பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் இலவச கண் பரிசோதனை நடத்தி, கண்புரை உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கிறது.தற்போது, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையுடன் இணைந்து, கல்பாக்கம் பல்நோக்கு சமுதாயக்கூடத்தில், நாளை துவங்கி, வரும் 29ம் தேதி வரை, இம்முகாமை நடத்துகிறது.இதுகுறித்து, நிலைய சமூக பொறுப்பு குழுவினர் கூறியதாவது:பொதுமக்களுக்கு நாளை முதல், 28ம் தேதி வரை, தினமும் காலை 8:00 - பிற்பகல் 2:00 மணி வரை, இலவச கண் பரிசோதனை நடத்தப்படும். கண்புரையால் பாதிக்கப்பட்டு தேர்வாகும் நபர்களுக்கு, 24ம் தேதி முதல், 29ம் தேதி வரை, இலவச அறுவை சிகிச்சை, கல்பாக்கத்தில் அளிக்கப்படும். பார்வை பாதிப்புள்ளவர்களுக்கு இலவச கண்ணாடியும் வழங்கப்படும். முகாமிற்கு வருவோர் ஆதார், பிற நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளையும் தவறாமல் கொண்டுவர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
14-Mar-2025