மேலும் செய்திகள்
பெண் படுகொலை கணவன் சீரியஸ்
20-Sep-2024
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் சந்தனகுமார், 46. இவரது மனைவி பரமேஸ்வரி, 40. சந்தனகுமார் மாடம்பாக்கம் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம், தம்பதி இருவரும் பலத்த காயங்களுடன், வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தனர். கல்லுாரி சென்று திரும்பிய அவர்களது மகள் காவியா, தாய் மற்றும் தந்தை இருவரும் ரத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதை கண்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர், பரமேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, சந்தனகுமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.இது தொடர்பாக, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், போலீசார் கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வந்தனர்.அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சந்தனகுமாரை விசாரித்தபோது, அவர் தான் தன் மனைவியை கொலை செய்தது தெரிந்தது.இது குறித்து போலீசார் கூறியதாவது:சந்தனகுமாருக்கும், அவரின் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம், இருவருக்கும் தகராறு முற்றியதில், கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.அப்போது, காய்கறி நறுக்குவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆத்திரத்தில் மனைவியை கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் குத்தி, சந்தனகுமார் கொலை செய்துள்ளார்.இது குறித்து மேலும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
20-Sep-2024