உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரியில் பர்னிச்சர் கடை உரிமையாளர் மனைவி படுகொலை

கூடுவாஞ்சேரியில் பர்னிச்சர் கடை உரிமையாளர் மனைவி படுகொலை

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த தைலவரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் சந்தனகுமார், 46. இவரின் மனைவி பரமேஸ்வரி, 40. சந்தனகுமார், மாடம்பாக்கம் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு, நந்தினி, காவியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று, கல்லுாரிக்கு சென்று, மாலையில் வீடு திரும்பிய காவியா, வீட்டிற்குள் கழுத்தில் ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடந்த தாய் பரமேஸ்வரியை கண்டு அதிர்ச்சியடைந்தார்.அருகிலேயே, அவரின் தந்தையும் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன், இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், பரமேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மயக்க நிலையில் இருந்த சந்தனகுமார், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை