உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோரம் குப்பை குவியல் அச்சிறுபாக்கத்தில் சீர்கேடு

சாலையோரம் குப்பை குவியல் அச்சிறுபாக்கத்தில் சீர்கேடு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே பள்ளிப்பேட்டை ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெரு செல்லும் சாலை அருகே, பிளாஸ்டிக் குப்பை மற்றும் ஹோட்டல் உணவு கழிவுகள் குவிந்துள்ளன.இவை காற்றில் பறந்து, அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பறந்து செல்கின்றன.இதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.மேலும், அகற்றப்படாமல் உள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் உணவு கழிவுகளை, அப்பகுதியில் உள்ள நாய்கள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.எனவே, சாலையோரத்தில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை