பஸ் நிறுத்தம் அருகே குப்பை சோத்துப்பாக்கத்தில் சீர்கேடு
மேல்மருவத்துார்:சோத்துப்பாக்கத்தில், பேருந்து நிறுத்தம் அருகே குப்பை குவிந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சோத்துப்பாக்கம் பகுதியில் திண்டிவனத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் பேருந்துகள், வந்தவாசி, வேலுார் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், சோத்துப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், இப்பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று, பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.பேருந்து நிறுத்தம் அருகே சாலை பகுதியிலேயே, ஹோட்டல் உணவு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பையை வீசிச் செல்கின்றனர்.இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே, பேருந்து நிறுத்தம் பகுதியில் குவிந்துள்ள குப்பையை அகற்ற, ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் எதிர்பார்க்கின்றனர்.