மேலும் செய்திகள்
தங்கம் கடத்தல் இருவரிடம் விசாரணை
16-Jan-2025
சென்னை, துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 1.3 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.7 கிலோ தங்கத்தை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.துபாயில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை சென்னை வந்த விமானத்தில், பயணித்த பயணியரின் உடைமைகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். சுற்றுலா விசாவில் பயணி ஒருவர் துபாய் சென்று திரும்பினார். சந்தேகத்தில், அவரது லக்கேஜ்களை சோதனை செய்தபோது, 1.7 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, 1.3 கோடி ரூபாய். அவரின் உடைமைகளில் மசாஜ் கருவிகள் இருந்துள்ளன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
16-Jan-2025