பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில் கிராம சபை
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி அலுவலக கட்டடத்தில், நேற்று காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவி பகவதி தலைமை தாங்கினார். செயலர் வடிவேல் முன்னிலை வகித்தார். தணிக்கை அதிகாரி ஜெயபால் முன்னிலையில், 2023 - 24ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடந்த பணிகள் தொடர்பாக, சமூக தணிக்கை நடைபெற்றது.இதில், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெருமாட்டுநல்லுார் ஊராட்சியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.