உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கடை கூரையில் அறுவடைக்கு தயாரான புல்

ரேஷன் கடை கூரையில் அறுவடைக்கு தயாரான புல்

சித்தாமூர்: சித்தாமூர் அருகே துாதுவிளம்பட்டு கிராமத்தில், மேல்நிலைத் தேக்கத்தொட்டி அருகே நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இதில், 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.நியாய விலைக் கடை, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.முறையான பராமரிப்பு இன்றி, கட்டடம் நாளடைவில் பழுதடைந்துள்ளது. மேலும், மேல்தளத்தில் புல் உள்ளிட்ட செடிகள் வளர்ந்து வருவதால், மழைக் காலத்தில், மேல் தளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து, அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் நனையாமல் பாதுகாப்பது சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள நியாய விலைக் கட்டடத்தை சீரமைக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ