| ADDED : மார் 14, 2024 10:31 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் பல்வேறு கொலை வழக்குகளில் ஈடுபட்ட ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீசாருக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 44. ரவுடி. இவர் மீது, கொலை வழக்குகள் உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவர், வழிப்பறியில் ஈடுபட்டதாக, கடந்த பிப்., மாதம், படாளம் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.அதன்பின், சுரேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு எஸ்.பி., சாய்பிரணீத் பரிந்துரை செய்தார்.இதனையேற்ற கலெக்டர் அருண்ராஜ், சுரேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.