உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே கால்நடைகளால் சுகாதார சீர்கேடு

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே கால்நடைகளால் சுகாதார சீர்கேடு

மேல்மருவத்துார், மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே கால்நடைகளை கட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சோத்துப்பாக்கம் ஊராட்சியில், சிவன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு, குழாய் வாயிலாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி துாண்களில், அப்பகுதியினர் கால்நடைகளை கட்டி வருவதால், அவற்றின் சாணங்கள், சிறுநீரகத்தால் தண்ணீர் திறக்கப்படும் குழாயின் அடி பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.மேலும், மாட்டுச் சாணம் தொட்டி அருகிலேயே கொட்டி குவிக்கப்படுகிறது.அதனால், நீர்த்தேக்க தொட்டி அருகே சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை, இதுகுறித்து ஆய்வு செய்து, 'பிளீச்சிங் பவுடர்' துாவி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ