உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவளத்தில் உயரமாக கட்டப்படும் கால்வாய் குடியிருப்புகளை வெள்ளம் சூழும் அபாயம்

கோவளத்தில் உயரமாக கட்டப்படும் கால்வாய் குடியிருப்புகளை வெள்ளம் சூழும் அபாயம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த இ.சி.ஆர்., சாலையில் கோவளம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள செங்கேனியம்மன் கோவில் தெருவில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு, மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் நடக்கின்றன. தற்போதுள்ள தரைமட்டத்தில் இருந்து 2 அடி உயரத்தில் கால்வாய் கட்டப்படுவதால், வீடுகள் பள்ளத்தில் இருப்பது போல் உள்ளன. இதனால், மழை, வெள்ளம் வீடுகளுக்குள் புகுவதுடன், கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் என, அப்பகுதியினர் அச்சமடைகின்றனர்.இதை தடுக்கும் வகையில், கால்வாய் உயரத்தை குறைத்து கட்டுவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது: இப்பகுதியில் அமைக்கப்படும் மழைநீர் கால்வாயின் உயரம் அதிகமாக உள்ளது. இதனால், வீடுகளுக்கு மழைநீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆழம் அதிகரித்து உயரத்தை குறைக்க வேண்டும்.மாறாக, உயரம் அதிகமாக கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், வீடுகள் தாழ்வான நிலைக்குச் சென்றுள்ளன.எனவே, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, குடியிருப்பு வாசிகளை பாதிக்காத வகையில் கால்வாய் மற்றும் சாலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ