உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சூடுபிடித்த பட்டாசு விற்பனை

சூடுபிடித்த பட்டாசு விற்பனை

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம், புதுப்பாக்கம், நாவலூர், தாழம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. நேற்று தீபாவளிக்கு முன் நாள் என்பதால் மக்கள் ஆர்வமாக கடைகளுக்கு சென்று சில்லறையாகவும், மொத்தமாகவும் பட்டாசுகளை வாங்கினர்.பல வகையான பட்டாசுகள் கொண்ட பரிசு பெட்டி 850 - 4, 000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல், துணி கடைகளிலும் புத்தாடைகளை எடுக்க மக்கள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ