உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இரும்புலியில் மனித உரிமை விழிப்புணர்வு

இரும்புலியில் மனித உரிமை விழிப்புணர்வு

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த இரும்புலி ஊராட்சியில், செங்கல்பட்டு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக, விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.இதில் தீண்டாமை, வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் குறித்தும், சமூக நீதி, மனித உரிமை, சமத்துவம் ஆகியவற்றின் அவசியம், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் மற்றும் தண்டனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில், இரும்புலி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை