உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண் ஊழியர்களை நிர்வகிக்க பெண் நிர்வாகிகளை நியமிக்க வலியுறுத்தல்

பெண் ஊழியர்களை நிர்வகிக்க பெண் நிர்வாகிகளை நியமிக்க வலியுறுத்தல்

கல்பாக்கம்:கல்பாக்கம் ஒப்பந்த நிறுவன பெண் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி, பெண் நிர்வாகிகளை நியமிக்க, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.அணுசக்தி துறையின் கீழ், கல்பாக்கத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்ட அணுசக்தி நிறுவனங்கள் இயங்குகின்றன. இங்கு பணியாற்றும் அறிவியலாளர், பொறியாளர் உள்ளிட்டோர் கல்பாக்கம், அணுபுரம் ஆகிய நகரிய பகுதிகளில் வசிக்கின்றனர்.அணுசக்தி தொழில் வளாகம் மற்றும் நகரிய பகுதிகளில், பொது சுகாதார துாய்மைப் பணி, தோட்ட பராமரிப்பு உள்ளிட்ட பணிகள், ஆண்டு ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகின்றன. நிறுவனங்கள் ஏராளமான பெண் ஊழியர்களை நியமித்து, பணிகளை மேற்கொள்கின்றன. பெண் ஊழியர்களுக்கான மேற்பார்வை நிர்வாகிகளாக, ஆண்களையே நிறுவனங்கள் நியமிக்கின்றன.ஆண் ஊழியரால் பாலியல் சீண்டல், பலாத்காரம் என, பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. கடந்த 1ம் தேதி அணுபுரத்தில், துாய்மைப் பணி செய்யும் பெண் ஊழியரை, மேற்பார்வையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டு, தற்போது கைதானார். எனவே, பெண் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி, பெண் நிர்வாகிகளையே நியமிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ