செங்கை புறவழிச்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புறவழிச்சாலை, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சர்வீஸ் சாலையில், பயணிகளை ஏற்றி, இறக்கி விடுகின்றனர்.இதேபோல தென்மாவட்டங்களில் இருந்து, சென்னை செல்லும் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் நின்று செல்கிறது. இப்பகுதியில், பயணியர் இறங்கி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.பயணியர் பாதுகாப்பு மற்றும் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிக்க, மேம்பாலம் கீழ் பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தில், தினமும் இரண்டு போலீசார் பணியில் ஈடுபட்டனர். தற்போது, செயல்படாமல் மூடி கிடக்கிறது. எனவே, பெண்கள் மற்றும் பயணியர் நலன்கருதி, புறக்கால் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.