செங்கை கலெக்டர் அலுலகம் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல்துறை, ஹந்து சமய அறநிலையத்துறை, முதன்மை கல்வி அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.இந்த அலுவலகல்களில், 800 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இவர்கள், காஞ்சிபுரம், சென்னை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண் ஊழியர்கள் அதிகமாக, பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.இவர்கள், செங்கல்பட்டு - மதுராந்தகம் வழி தடத்தில் செல்லும் பேருந்துகளில் செல்லும்போது, மலையடி வேண்பாக்கம் ஐ.டி.ஐ., பஸ் நிறுத்தம் பகுதியில், நின்று செல்கிறது. இங்கிருந்து, மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியர் , கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து செல்கின்றனர். இதேபோல மதுராந்தகம் - செங்கல்பட்டு வழி தடத்தில் செல்லும் பேருந்துகளும், மேற்கண்ட இடத்தில் நின்று செல்கிறது. இவர்களின் நலனை கருதி, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள, பஸ் நிறுத்தம் பகுதியில், நின்று செல்ல வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.இந்த உத்தரவு செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், பொதுமக்கள் நலன்கருதி, கலெக்டர் அலுவலகம் பகுதியில், பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.