பயிர் கணக்கீட்டு பணிக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்
செங்கல்பட்டு: செ ங்கல்பட்டு மாவட்டத்தில், பயிர் கணக்கீட்டு பணிக்கு விவசாயிகள், மக்கள் ஒத்துழைப்பு அளிக் க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக, பயிர் விபரம் கணக்கீட்டு பணிகள் நடந்து வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம் முழுதும் இப்பணிகளில், 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒவ்வொரு புல எண் மற்றும் உட்பிரிவிலும் கணக்கீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர், இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். சந்தேகங்கள் அல்லது விபரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மொபைல் போன் எண்: 77085 41376 மற்றும் வேளாண்மை அலுவலர் மொபைல் போன் எண்: 80123 45067 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.