உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்பாக்கத்தில் தீவிர கண்காணிப்பு

கல்பாக்கத்தில் தீவிர கண்காணிப்பு

கல்பாக்கம்,:கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகத்தில், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்டவை இயங்குகின்றன. அணுமின் நிலைய பாதுகாப்பு கருதி, அவ்வளாக முக்கிய பகுதிகளில் ராணுவ வீரர்கள் கண்காணிக்கின்றனர். பிற நிறுவன பகுதிகளில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிக்கின்றனர்.வான், கடல் ஆகிய பகுதிகளில், 'ரேடார்' கண்காணிப்பும் உள்ளது. உச்சபட்ச பாதுகாப்பு இருப்பினும், பயங்கரவாத அச்சுறுத்தலால் சுதந்திர தினம், பாபர் மசூதி இடிப்பு ஆகிய நாட்களில், தீவிரமாக கண்காணிக்கப்படும். பாபர் மசூதி இடிப்பு நாளான நேற்று, மேலும் பாதுகாப்பை பலப்படுத்தி, தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. கல்பாக்கம், அணுபுரம் நகரிய பகுதிகளிலும், துறை தொடர்பற்ற பிற நபர்களின் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ