உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காருக்கு தீ வைத்தவர் குறித்து விசாரணை

காருக்கு தீ வைத்தவர் குறித்து விசாரணை

பீர்க்கன்காரணை: பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுங்குன்றத்தில், என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு, குரூப் கமாண்டராக பணிபுரிந்து வரு பவர் அங்குஷ் ஷர்மா. இவருக்கு சொந்தமான ஹோண்டா சிட்டி கார், இந்த மையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, இந்த கார் தி டீரென தீப்பற்றி எரிந்தது. பணியில் இருந்த ஊழியர், இது குறித்து தகவல் தெரிவித்ததும், அனைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை