உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரும்பாக்கம் ஐ.டி.ஐ., சேர்க்கைக்கு அழைப்பு

பெரும்பாக்கம் ஐ.டி.ஐ., சேர்க்கைக்கு அழைப்பு

சென்னை:பெரும்பாக்கம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், எலக்ட்ரீசியன், வெல்டிங், ‛ஏசி' மெக்கானிக், கணினி மற்றும் இருசக்கர வாகனம் பழுது நீக்கம் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.மேலும், 4.0 திட்டத்தில், பிராசஸ் கன்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், பேசிக் டிசைனர் மற்றும் சி.என்.சி., மெஷினிங் டெக்னீசியன் ஆகிய நான்கு பாடப்பிரிவுகளும் உள்ளன.மொத்தம் உள்ள ஒன்பது பாடப்பிரிவுகளுக்கு, சேர்க்கை நடைபெறுகிறது. மொத்தம், 300 இருக்கைகள் உள்ளன. 14 முதல் 40 வயதுள்ள ஆண்கள் சேரலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.வெல்டிங் பாடப்பிரிவுக்கு எட்டாம் வகுப்பும், இதர பாடப்பிரிவுகளுக்கு 10ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி, ஒன்று மற்றும் இரண்டு ஆண்டுகள்.கட்டணம் கிடையாது. சீருடை, பாடப்புத்தகம், காலணி, சைக்கிள், வரைபட கருவிகள் இலவசமாக வழங்கப்படும்.இலவச பேருந்து வசதி, மாதம் 750 ரூபாய் உதவித்தொகையுடன், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்திருந்தால், கூடுதலாக 1,000 ரூபாய் வழங்கப்படும்.படித்த பின், தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். சேர்க்கை தொடர்பான விபரங்களுக்கு, 99629 86696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ