உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேளாண் இணை இயக்குனர் பொறுப்பேற்பு

வேளாண் இணை இயக்குனர் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனராக, பிரேம்சாந்தி என்பவர், பொறுப்பேற்றுக்கொண்டார்.செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனராக அசோக் பணிபுரிந்தார். அவர், வேளாண்மை கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.அதன்பின், கடலுார் மாவட்டத்தில், வேளாண்மை துணை இயக்குனராக பணியாற்றிய பிரேம்சாந்தி, இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை அலுவலகத்தில், வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி, நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ