உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜூனியர் கால்பந்து; சென்னை அணி சாம்பியன்

ஜூனியர் கால்பந்து; சென்னை அணி சாம்பியன்

சென்னை: மாநில அளவில் நடந்த ஜூனியர் கால்பந்து போட்டியில், சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.தமிழ்நாடு கால்பந்து சங்கம் மற்றும் விருதுநகர் கால்பந்து சங்கம் இணைந்து, ஆண்களுக்கான 39வது ராமசாமி பிள்ளை கோப்பைக்கான ஜூனியர் கால்பந்து போட்டியை, கடந்த 29ம் தேதி சாத்துாரில் நடத்தியது.இதில் மாநிலத்தின் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட 27 மாவட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் - அவுட் முறையில் நடந்தன.இதன் பி - பிரிவில் இடம்பெற்ற சென்னை அணி, தன் சிறப்பான ஆட்டத்தால் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது. அதே போல் சி - பிரிவில் இடம் பெற்ற கன்னியாகுமரி அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. விறுவிறுப்பான இறுதி போட்டியில், சென்னை மாவட்ட அணி 1 - 0 என்ற கோல் கணக்கில், கன்னியாகுமரி அணியை வீழ்த்தி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !