உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எலப்பாக்கம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

எலப்பாக்கம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

அச்சிறுபாக்கம்:மேல்மருவத்துார் அருகே உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் சின்மய விநாயகர், பாலமுருகன் கோவில் உள்ளது. இது, திருமணத் தடை, கல்வி, தொழில் வளம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட கேட்ட வரம் தரும் தலமாக புகழ்பெற்றது.ஆண்டுதோறும் சித்திரை மாதம் பால் காவடி பெருவிழா மற்றும் மாதந்தோறும் கிருத்திகை, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்களில், சிறப்பான முறையில் விழா நடந்து வருகிறது.இங்கு, இரண்டாம் ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த 2ம் தேதி மேள தாளங்கள் முழங்க, காப்பு அணிதல் நிகழ்வுடன் துவங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்து வந்தன.இன்று மாலை 4:30 மணிக்கு மேல், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.கந்த சஷ்டி விழாவிற்கு வருகை தரும் அனைத்து முருக பக்தர்களையும், தமிழச்சி அடுப்பங்கரை சமையல் மாஸ்டர், தங்கராஜ் டிஜிட்டல் ஸ்டுடியோ, நடராஜன் பூ கடை, கந்தன் மாவு மில் மற்றும் அரிசி கடை, கன்னிவேல் ஏஜென்சி, ஆர்.கே., கன்ஸ்ட்ரக் ஷன் ஆகியோர் வரவேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை