உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் காஸ் அடுப்பில் சமையல் மாமல்லையில் கர்நாடக பக்தர்களால் பீதி

சாலையில் காஸ் அடுப்பில் சமையல் மாமல்லையில் கர்நாடக பக்தர்களால் பீதி

மாமல்லபுரம், கர்நாடகாவிலிருந்து வரும் ஆதிபராசக்தி பக்தர்கள், மாமல்லபுரத்தில் திறந்தவெளியில், சாலையில் காஸ் சிலிண்டர் அடுப்பில் சமையல் செய்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேல்மருவத்துாரில் உள்ள சித்தர் பீட ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச உற்சவ வழிபாடு நடக்கிறது.இதை முன்னிட்டு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில பக்தர்கள், ஒரு மாதத்திற்கு மேல்மருவத்துாரில் குவிகின்றனர்.பின், ஸ்தலசயன பெருமாள் வீற்றுள்ள மாமல்லபுரம் கடலிலும் நீராட, மாமல்லபுரத்திற்கு படையெடுக்கின்றனர்.டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குழுவாக வரும் அவர்களில் பெரும்பாலானோர், மாமல்லபுரம் சாலை பகுதிகளில் பேருந்துகளை நிறுத்தி, இரவில் பேருந்திலேயே உறங்குகின்றனர்.சாலையோர திறந்தவெளியில், காஸ் சிலிண்டர் அடுப்பில் சமைக்கின்றனர். சாலையிலே சாப்பிட்டு முடித்து உணவு கழிவுகள், சாப்பிடும் காகித தட்டுகள், தண்ணீர் குவளைகள் ஆகியவற்றை கண்ட இடங்களில் குவிக்கின்றனர்.இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது.காஸ் சிலிண்டர் அபாயத்தால், சுற்றுலா பயணியர் அச்சத்துடன் செல்கின்றனர். கனரக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், கர்நாடக பக்தர்கள் மீது மோதும் அபாயமும் உள்ளது. இவர்களின் செயல்பாட்டால், சர்வதேச சுற்றுலா பயணியர் முகம் சுளிக்கின்றனர். எனவே, சாலையில் காஸ் சிலிண்டர் வைத்து அபாயமாக சமைப்பதை, அரசுத் துறையினர் தடுக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி