உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கரும்பாக்கம் அரசு பள்ளி ஆண்டு விழா

கரும்பாக்கம் அரசு பள்ளி ஆண்டு விழா

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த ஆண்டு விழாவில், தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார்.பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஜெனிபர் முன்னிலை வகித்தார்.வட்டார கல்வி அலுவலர் ஜூலியட் உட்பட பலர் பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், மாணவியரை ஊக்குவித்தும் பேசினர். தொடர்ந்து, பள்ளி ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட அறிவுத்திறன், நடனப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி