உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண் வக்கீலிடம் அத்துமீறல் கோடம்பாக்கம் நபர் கைது

பெண் வக்கீலிடம் அத்துமீறல் கோடம்பாக்கம் நபர் கைது

கோடம்பாக்கம், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 46 வயது பெண், உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிகிறார்.இவர், வீட்டின் வெளியே வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு, நேற்று முன்தினம், தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.அவ்வழியே, அகில பாரத ஹிந்து அமைப்பின் மாநில துணை தலைவர் மாயாஜி என்ற சுந்தரம், 47, காரில் சென்றுக் கொண்டிருந்தார்.திடீரென காரை நிறுத்தி, பெண் வழக்கறிஞரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின் சுந்தரம், அங்கிருந்து சென்றுவிட்டார்.இதுகுறித்து, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில், பெண் வழக்கறிஞர் புகார் அளித்தார். போலீசார், சுந்தரம் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து, துரைப்பாக்கத்தில் இருந்த சுந்தரத்தை, போலீசார் நேற்று கைது செய்தனர்.கடந்த 2024ம் ஆண்டு பிரியாணி கடையில் மாமுல் கேட்டு தகராறு செய்த வழக்கில், சுந்தரம் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ