உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேருந்து நிறுத்த நிழற்குடை கூனங்கரணைவாசிகள் கோரிக்கை

பேருந்து நிறுத்த நிழற்குடை கூனங்கரணைவாசிகள் கோரிக்கை

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த கூனங்கரணை கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், கூனங்கரணை பேருந்து நிறுத்தம் உள்ளது.இதை மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி போன்ற வெளியூர்களுக்கு செல்பவர்கள், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர் என, தினசரி ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர்.பல ஆண்டுகளாக இங்கு நிழற்குடை வசதி இல்லாததால், வெயில் காலத்தில் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் போது கால்வலி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கூனங்கரணையில் பேருந்து நிறுத்த நிழற்குடை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி