உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சேதமான சாலையை சீரமைக்க குமுளி மக்கள் வலியுறுத்தல்

 சேதமான சாலையை சீரமைக்க குமுளி மக்கள் வலியுறுத்தல்

சித்தாமூர்: குமுளி கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை ஜல்லி பெயர்ந்து சேதமடைந்து உள்ளதால் சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சித்தாமூர் அருகே சிறுநகர் ஊராட்சிக்கு உட்பட்ட குமுளி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத் தெருவில், 20 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் சிமென்ட் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்தது. இதனால் சாலையில் செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து சேதமடைந்துள்ள சிமென்ட் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ