பள்ளி மாணவி பலாத்காரம் இருவருக்கு ஆயுள் தண்டனை
செங்கல்பட்டு:சென்னை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, எட்டாம் வகுப்பு படித்து வந்தார். 2018ம் ஆணடு, ஜூலை மாதம் 11ம் தேதி, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, பனையூர் பகுதியைச் சேர்ந்த ரகமதுல்லா, 45, சாகுல்ஹமீது, 42, ஆகியோர், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர்.இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து, கானத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின், இருவரும் நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்தனர்.இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ரகமதுல்லா, சாகுல்ஹமீது ஆகியோருக்கு, ஆயுள் தண்டனையும், தலா 3,500 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமாபானு நேற்று தீர்ப்பளித்தார்.அதன்பின், இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து, புழல் சிறையில் கானத்துார் போலீசார் அடைத்தனர்.