உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை அருகே அடுத்தடுத்து 5 வாகனங்களில் மோதிய லாரி

செங்கை அருகே அடுத்தடுத்து 5 வாகனங்களில் மோதிய லாரி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இருந்து, எம்.சாண்ட் மணல் ஏற்றிய டாரஸ் லாரி, நேற்று மதியம் ஜி.எஸ்.டி., சாலையில் செங்கல்பட்டு நோக்கி வந்தது.டாரஸ் லாரியை, திண்டிவனம் அடுத்த மொளச்சூர் பகுதியைச் சேர்ந்த ராபின், 25, என்பவர் ஓட்டினார்.செங்கல்பட்டு அடுத்த பழவேலி அருகில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி, முன்னால் சென்ற இரண்டு கார், ஒரு 'எய்ச்சர்' சரக்கு வாகனம், திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் மீது மோதி, சாலையோர பள்ளத்தில் சாய்ந்தது.இதில் காயமடைந்த ஓட்டுநர் ராபினை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மற்ற வாகனங்களில் இருந்தோர், சிறு காயங்களுடன் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இந்த விபத்து காரணமாக, ஜி. எஸ்.டி., சாலையில் நீண்ட துாரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ