உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பராமரிப்பு பணி காரணமாக மதுராந்தகம் கிளைச்சிறை மூடல்

பராமரிப்பு பணி காரணமாக மதுராந்தகம் கிளைச்சிறை மூடல்

மதுராந்தகம்,:மதுராந்தகம் ஜி.எஸ்.டி, சாலையில் உள்ள கிளைச்சிறை, பராமரிப்பு பணி காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமையான சிறை உள்ளது. 90 சென்ட் பரப்பளவில் கிளைச்சிறை செயல்பட்டு வந்தது.மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சிறிய குற்ற வழக்குகள் மற்றும் மண் திருட்டு, கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்; 62 கைதிகள் உள்ளனர்.மேலும் செய்யூர் தாலுகா நீதிமன்றம், மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் 1, 2 ஆகியவற்றில் ஆஜர்ப்படுத்தப்படும் குற்றவாளிகளின், குற்றச் சம்பவங்களுக்கு ஏற்ப, அவர்கள் மதுராந்தகம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சேதமடைந்த நிலையிலும், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத கிளைச் சிறையை மூட உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.அதன்படி, தமிழக சிறைத்துறை வாயிலாக, மதுராந்தகம் உட்பட 18 கிளைச் சிறைகளை மூட முடிவு செய்யப்பட்டு, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., உத்தரவிட்டிருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன், அந்த உத்தரவு, நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், மதுராந்தகம் கிளைச்சிறை மூடப்பட்டது. கழிப்பறைகள் பராமரிப்பு, போதிய அடிப்படை வசதிகள் மற்றும் கட்டட பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை