உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.1.20 கோடி மோசடி மடிப்பாக்கம் நபர் கைது

ரூ.1.20 கோடி மோசடி மடிப்பாக்கம் நபர் கைது

சென்னை, மடிப்பாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 50. இவர், தந்தை ஞானசுந்தரத்துடன் சேர்ந்து, போலி ஆவணங்கள் தயாரிப்பு, நிலமோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்.இதனால், 2005ல், சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகளால், இருவரும் கைது செய்யப்பட்டனர்.ஜாமினில் வெளிவந்த பின், தந்தை இறந்துவிட பாலாஜி மட்டும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த வர்த்தகர் டேனியல் சாமுவேல், 70, என்பவரிடம், 16 வகையான சொத்து ஆவணங்களை கொடுத்து, 2.85 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்.இது குறித்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலி என, தெரியவந்தது.இது தொடர்பான வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். அதன் பின், ஜாமினில் வெளியே வந்தார்.இந்த நிலையில், அமைந்தகரையைச் சேர்ந்த அபிபுல்லா என்பவரிடம், போலி ஆவணங்கள் வாயிலாக 1.20 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதனால், பாலாஜியை, மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ