உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலாத்தம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

பாலாத்தம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

மாமல்லபுரம்,மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் பகுதியில், பழமையான பாலாத்தம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியினர், அம்மனை கிராம தேவதையாக வணங்குகின்றனர்.அதே கோவிலில் மாரியம்மன், கெங்கையம்மன் ஆகியோர் சிறிய சன்னிதிகளில் வீற்றிருந்தனர்.தற்போது பாலாத்தம்மன் கோவிலை புனரமைத்து, மற்ற அம்மன்களுக்கு கோவில்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இதை முன்னிட்டு நேற்று முன்தினம் கோ பூஜை, தீர்த்த சங்கல்பம், கணபதி பூஜை, முதல் கால பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் துவக்கப்பட்டன.நேற்று காலை, மூன்றாம் கால பூஜை நிறைவடைந்து, சன்னிதிகளில் புனித நீரூற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.l அச்சிறுபாக்கம் ஒன்றியம் ஒரத்தியில், 2,000 ஆண்டுகள் பழமையான பர்வதாம்பிகை உடனுறை பரசுராமேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலை புனரமைப்பு செய்ய ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் முடிவெடுத்து, பணிகள் நடைபெற்று வந்தன.பணிகள் அனைத்தும் முடிவுற்று, நேற்று முன்தினம் கும்பாபிஷேக பணிகளுக்காக பந்தக்கால் நடப்பட்டது.முதல் கால பூஜையுடன் மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, நவகிரக பூஜை, தனபூஜையுடன் கணபதி ஹோமம், கோ பூஜையுடன் விழா தொடங்கியது.பின், இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. நேற்று, நான்காம் கால யாக சாலை பூஜையில் வேத மந்திரங்கள் முழங்க, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டுவரப்பட்டு, காலை 9:00 - 10:30 மணிக்குள், மேள தாளங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது.பின், கோபுர கலசத்திற்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில், விழா குழுவினர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ