மேலும் செய்திகள்
ஆண் சடலம் கண்டெடுப்பு
15-Jun-2025
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் காவல் எல்லைக்குட்பட்ட, சோத்துப்பாக்கம் - செய்யூர் மாநில நெடுஞ்சாலையில், பொறையூர் பயணியர் நிழற்குடை பின்புறம் உள்ள தென்னந்தோப்பில், வடமாநிலத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.மேல்மருவத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15-Jun-2025