உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள்,52; பிளம்பர்.திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், தன் வீட்டின் மாடியில் அமர்ந்து மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.ஆனால், தனக்கு காயம் ஏதும் இல்லை எனக் கூறி, அனைவரிடமும் நன்றாக பேசியுள்ளார்.இரவு 2:30 மணியளவில், இளையபெருமாள் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !