மேலும் செய்திகள்
இளம்பெண் பலாத்காரம் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
14-Nov-2025
செங்கல்பட்டு: சாராய விற்பனை குறித்து தகவல் தெரிவித்தவரை கொலை செய்த வழக்கில், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது. செய்யூர் அடுத்த அமைந்தங்கரணை காலனியைச் சேர்ந்தவர் ஆதிகேசவன், 22. இவர், ஆற்காடு கிராமத்தில், சரவணன் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக, 2008 மே 9ம் தேதி, செய்யூர் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி தகவலறிந்த சரவணனின் தாய் நாகம்மாள், 45, விளங்காடு விஜயராகவன், 40, ஆகியோர் சேர்ந்து, ஆதிகேசவனை கத்தியால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து, செய்யூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயராகவன், நாகம்மாள் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி சரவணகுமார் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் வையாபுரி ஆஜரானார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், விஜயராகவனுக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால், மூன்று மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும், நீதிபதி சரவணகுமார், நேற்று தீர்ப்பளித்தார். மேலும், வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், நாகம்மாளை விடுதலை செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.
14-Nov-2025