செங்கையில் இன்று மாரத்தான் போட்டி
செங்கல்பட்டு:செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலக வளாகத்தில், இன்று மாரத்தான் போட்டி நடக்கிறது. இதுகுறித்து, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலக வளாகத்தில், இன்று காலை 7:00 மணிக்கு, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி ஆண், பெண் இருபாலருக்கும் மாரத்தான் போட்டி நடக்கிறது. இதில், 17-25 வயதிற்குட்பட்ட ஆண்கள், 8 கி.மீ., பெண்கள் 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 10 கி.மீ., பெண்கள் 5 கி.மீ., துாரம் போட்டிகள் நடக்கின்றன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.