மூன்றாம்கட்டமாக 6 தடத்தில் மினி பஸ் இயக்க ஆணை
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக, ஆறு வழித்தடங்களில், 'மினி பஸ்' எனும் சிற்றுந்துகள் இயக்க, தனியாருக்கு அனுமதி ஆணையை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று வழங்கினார்.தமிழகம் முழுதும், 1999ம் ஆண்டு, நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு, சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின், கிராமங்களுக்கு இயக்கப்பட்ட சிற்றுந்துகள் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டன.இதையடுத்து, புதிய சிற்றுந்து திட்டம் குறித்து, தமிழக அரசிதழில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிற்றுந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கு, மாவட்ட அரசிதழில் கடந்த பிப்., 12ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.செங்கல்பட்டு, தாம்பரம், சோழிங்கநல்லுார் ஆகிய பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 44 வழித்தடங்களுக்கும், ஐந்து புலம் பெயர்வு வழித்தடங்களுக்கும் ஆணையை, கலெக்டர் வழங்கினார்.இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், மூன்றாவது கட்டமாக, ஆறு வழித்தடங்களுக்கு, 39 பேர் விண்ணப்பித்தனர். அதன் பின், ஆறு வழித்தடங்கள் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஆறு பேருக்கு சிற்றுந்து வழித்தட ஆணையை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர்களான செங்கல்பட்டு இளங்கோ, சோழிங்கநல்லுார் பிரேமா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
6 வழித்தடங்கள் விபரம்
1. மாம்பாக்கம் அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளி- காயார் பேருந்து நிறுத்தம்.2. மதுராந்தகம் பேருந்து நிறுத்தம் - காட்டுக்கரணை அரசு மேல் நிலைப்பள்ளி.3. கல்யாங்குளம் - மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தம்4. தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம் -டி.டி.கே., நகர் மின்வாரிய அலுவலகம்5. சோழிங்கநல்லுார் எல்காட் ஐ.டி.பார்க் - மாம்பாக்கம் சந்திப்பு6. மண்ணிவாக்கம் காவல் நிலையம் - டி.எம்.ஜி., கல்லுாரி