உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புது சிகிச்சை பிரிவு விரைவில் திறப்பு அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

புது சிகிச்சை பிரிவு விரைவில் திறப்பு அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில், 55வது பட்டமளிப்பு விழா, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி தலைமையில், கல்லுாரி கலையங்கில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் அரசு வரவேற்றார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று, நுாறு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:தமிழகத்தில், 36 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 5,050 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளேன். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில், நுாறு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தாம்பரம் பகுதியில், 400 படுக்கைகளுடன், 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கும் பணிகள் துவங்கி, முடிவுபெறும் நிலையில் உள்ளன. இதே வளாகத்தில், தொற்று நோய் சிகிச்சை பிரிவு அமைக்கும் பணிகள், 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கி, முடிவு பெற்றுள்ளன. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், விபத்து தீவிர சிகிச்சை பிரிவு, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்க உள்ளார்.இவ்வாறு, அவர் பேசினார்.செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, திருப்போரூர் வி.சி., - எம்.எல்ஏ., பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மருத்துவ கண்காணிப்பாளர் ஜோதிகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை