உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாலிபரிடம் மொபைல் போன் பறிப்பு

வாலிபரிடம் மொபைல் போன் பறிப்பு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் கே.எஸ்.எஸ்., தெருவில் வசிப்பவர் ஸ்டாலின், 32. இவர், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, தையூர் பகுதியில், மொபைல் போனில் பேசிக்கொண்டு மிதிவண்டி ஓட்டிச்சென்றார்.அப்போது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், ஸ்டாலினிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். உடனே, அவர் கையில் இருந்த, 15,000 மதிப்புள்ள 'ரெட்மி' என்ற அடியிடை போனை பறித்துக்கொண்டு தப்பினர்.இதுதொடர்பாக, ஸ்டாலின் கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மொபைல் போனை பறித்துக்கொண்டு மாயமான மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ