உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாலிபர்களிடம் மொபைல் போன் பறிப்பு

வாலிபர்களிடம் மொபைல் போன் பறிப்பு

திருப்போரூர்:கழிப்பட்டூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வாலிபர்களிடம் மொபைல் போன் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்போரூர் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சி கழிப்பட்டூர் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் சுரபி, 26, டேனியேல்.18. இவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில் வெளியில் சென்றுவிட்டு அடுக்குமாடி குடியிருப்புக்கு திரும்பினர். தங்கள் பைக்கை பார்க்கிங்கில் நிறுத்தியபோது, அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள், இருவரிடமும் பேச்சு கொடுத்தனர்.பின் அவர்களை மிரட்டி இரண்டு ஐ போன்கள், கிரெடிட் கார்டு, விலை உயர்ந்த வாட்ச், 4,500 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்து தப்பினர். இதுகுறித்த புகாரின்படி கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை