உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வடமாநில இளைஞரிடம் பணம், செயின் பறிப்பு

வடமாநில இளைஞரிடம் பணம், செயின் பறிப்பு

சேலையூர்: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆசிஷ் சந்த்ராகரய், 30. கூலி தொழிலாளி. இவர், தாம்பரம் அருகே சேலையூர், சந்தோஷ்புரத்தில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு, இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், நேற்று முன்தினம் இரவு, துாங்கி கொண்டிருந்த ஆசிஷ் சந்த்ராகரய் மற்றும் அவரது நண்பரை எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி, 3,000 ரூபாய், 2 மொபைல் போன், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்து தலைமறைவாகினர். சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி