உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பருவமழை மீட்பு பணி மதுராந்தகத்தில் ஒத்திகை

பருவமழை மீட்பு பணி மதுராந்தகத்தில் ஒத்திகை

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், வடகிழக்கு பருவ மழையில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு- ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர். மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் லட்சுமண நாராயணன், உதவி மாவட்ட அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில், விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மதுராந்தகம் ஏரியில் நேற்று நடந்த இந்த ஒத்திகையில், நிலைய அலுவலர் சீனுவாசன் மற்றும் மீட்பு படை வீரர்கள், வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் மக்களை காப்பாற்றும் முறைகளை செய்து, விழிப்புணர்வு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டனர். இப்பயிற்சி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி