உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவிலில் கார் மோதி தாய் பலி; மகள் காயம்

சிங்கபெருமாள் கோவிலில் கார் மோதி தாய் பலி; மகள் காயம்

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி, 52.ஸ்ரீவாரி நகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில், துாய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.நேற்று காலை இவர், தன் மகள் மீனா, 34, என்பருடன் சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் சாலையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலுக்குச் சென்றார்.இருவரும் மீண்டும், வீட்டிற்கு நடந்து வந்த போது, ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த 'ஷிப்ட் டிசையர்' கார், இருவர் மீதும் மோதியது.இதில், தேவி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மீனாவை போக்குவரத்து போலீசார் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, பொத்தேரியில் இயங்கி வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த சத்யராஜ், 23, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ