உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமிக்கு பாலியல் தொல்லை தாயின் 2வது கணவருக்கு வலை

சிறுமிக்கு பாலியல் தொல்லை தாயின் 2வது கணவருக்கு வலை

மறைமலை நகர்:மகள் முறை என்றும் பாராமல், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தாயின் இரண்டாவது கணவரை, போலீசார் தேடி வருகின்றனர். மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 31 வயது பெண், தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று, தனியாக வசித்து வந்தார். இவருக்கு 13 வயது மகள் உள்ளார். இந்நிலையில், 2018ம் ஆண்டு சிறுமியின் தாய், யுவராஜ், 31, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி, இதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி மதுபோதையில் வந்த யுவராஜ், மகள் முறை என்றும் பாராமல், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, உடலில் காயங்கள் ஏற்படுத்தியுள்ளார். வெளியில் யாரிடமாவது கூறினால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் கூற, அவர் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், யுவராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை