உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏற்ற இறக்கமான சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

ஏற்ற இறக்கமான சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில்- - பாலூர் சாலை 9 கி.மீ., தூரம் உடையது. இச்சாலையை தெள்ளிமேடு, கொளத்தூர், வெங்கடாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில், தெள்ளிமேடு- - கொளத்தூர் வரை மூன்று ஆண்டுகளுக்கு முன், 3 அடி சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றன.விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைக்கும், பழைய சாலைக்கும் இடையே குறிப்பிட்ட உயரம் ஏற்ற இறக்கமாக இருப்பதால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:கொளத்தூர் பகுதியில் உள்ள சாலை ஏற்ற, இறக்கமாக உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். இதனால், வாகனங்கள் ஒருபக்கமாக இழுத்து செல்லும் நிலை உள்ளது.அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் நடக்கின்றன. எனவே, இந்த சாலையை முறையாக சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை